மதுரை: உசிலம்பட்டி அருகே ரெட்டியபட்டியைச் சேர்ந்த பரமன் (55) தனது தோட்டத்தில் பூக்கள் விவசாயம் செய்து வந்தார். பரமன் மகன் தெய்வேந்திரன், திண்டுக்கல் மலர்ச் சந்தையில் கடை நடத்தி வரும் பாண்டியராஜன், பாலமுருகனிடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடன் ரூ.4 லட்சத்துக்கு வட்டி சேர்த்து ரூ.17 லட்சம் ஆனதாகவும், அதற்கு ஈடாக பரமனின் நிலத்தை தங்கள் பெயருக்கு பதிவு செய்து தர வேண்டும் என்று பாண்டியராஜன் தரப்பினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மனமுடைந்த பரமன் நேற்று (ஜன., 29) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.