அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் வியாழன் அன்று ஒரு சோகம் நிகழ்ந்தது. ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் சிறிய விமானம் ஒன்று பொடோமாக் ஆற்றில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் 60 பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிஎஸ்ஏ ஏர்லைன்ஸ் விமானம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பான முழு விவரம் இன்னும் தெரியவரவில்லை.