"பார்க்கிங்" படத்துக்கு ஆஸ்கார் அகாடமி அங்கீகாரம்!

80பார்த்தது
"பார்க்கிங்" படத்துக்கு ஆஸ்கார் அகாடமி அங்கீகாரம்!
"பார்க்கிங்" படத்தின் திரைக்கதைக்கு ஆஸ்கார் அகாடமியின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் வெளியான "பார்க்கிங்" படத்தின் திரைக்கதையை தனது நூலகத்தில் வைப்பதற்காக ஆஸ்கார் அகாடமி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண், "ஒரு நல்ல கதை அதற்கான இடத்தை தானே தேடிப் போகும்" என பதிவிட்டுள்ளார். படம் வர்த்தக ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.