ரூ.500-ஐ தொட்டால் ரூ.5000 கிடைக்கும்! ஆசையில் பறிபோன பணம்

61பார்த்தது
ரூ.500-ஐ தொட்டால் ரூ.5000 கிடைக்கும்! ஆசையில் பறிபோன பணம்
சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த வினோத் செல்போனில் பேஸ்புக் பக்கத்தை பார்த்த போது அதில், " 500 ரூபாய் மந்திர நோட்டைத் தொட்டால் ரூ.5000 கேஷ் பேக் பெறலாம்” என கூறப்பட்டிருந்தது. அவரும் ஆசையில் பதிவை கிளிக் செய்த போது உங்களது வங்கி கணக்கில் ரூ.5000 வந்துள்ளதாக குறுந்தகவல் வந்தது. வங்கி கணக்கு இருப்பை வினோத் சரி பார்த்தபோது ரூ. 4650 மொத்தமாக எடுக்கப்பட்டது தெரிந்தது. முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்துடன் லிங்க்கை அனுப்பி இந்த மோசடி நடந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி