மதுபான லாரி விபத்து - பாட்டில்களை அள்ளிச் சென்ற மக்கள்

83பார்த்தது
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் - போயினப்பள்ளி பகுதி இடையே இன்று (மே 23) மதுபாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேகமாக ஓடிச் சென்று பாட்டில்களை எடுக்க ஆரம்பித்தனர். பின்னர், விபத்தில் இருந்து தப்பிய ஓட்டுநரும் உதவியாளரும் மது பானங்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மக்களை அங்கிருந்து விரட்டியடிந்து மாற்று வாகனத்தில் மது பானங்களை ஏற்றி அனுப்பி வைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி