திருவள்ளுவர் முதன் முதலாக உருவம் பெற்றது எப்படி தெரியுமா?

81பார்த்தது
திருவள்ளுவர் முதன் முதலாக உருவம் பெற்றது எப்படி தெரியுமா?
1959ம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடுவதற்காக வள்ளுவருக்கு உருவம் கொடுக்க முடிவெடுக்கப்பட்டது. வேணுகோபால் ஷர்மா என்கிற ஓவியர் வரைய, பாரதிதாசன் அதை மேற்பார்வையிட்டார். 1960ம் ஆண்டு முடிக்கப்பட்ட அந்த ஓவியம் தஞ்சை ராமநாத மன்றத்தில் 49 தமிழ் புலவர்களை கொண்டு மாநாடு நடத்தப்பட்டு, சாதி, மத, சமய அடையாளங்கள் இல்லாத வள்ளுவரின் புகைப்படம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இந்த படம் 1991ல் நாட்டுடமையாக்கப்பட்டு பள்ளி, கல்லூரி, காவல் நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் நிறுவப்பட்டது.