அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

56பார்த்தது
அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
எண்ணூர் எண்ணெய் கழிவு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் துறை செயலாளர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், ஆட்சியர்கள், மீன்வள இயக்குனர் அடங்கிய குழு அமைத்து திங்கள்கிழமை ஆய்வு செய்து செவ்வாய்க்கிழமை அன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மணலி தொழிற்பேட்டை சுற்றியுள்ள பகுதிகள், நெடுஞ்சாலைகள், குடியிருப்புகள் முழுவதும் எண்ணெய் கழிவுகளைக் காண முடிவதாகவும், இதை எப்படி சொற்ப அளவில் என மாசுக்கட்டுப்பாடு வாரியம் கூற முடியும் என பசுமைத் தீர்ப்பாயம் கேள்வியெழுப்பியுள்ளது.