இன்றைய நாகரீக உலகில் பலர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். குட்கா, புகையிலை போன்றவற்றால் ஏற்படும் பின்விளைவுகள் உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுகிறது. இருப்பினும், சில அறிகுறிகளால் வாய் புற்றுநோயைக் கண்டறிய முடியும். மெல்லுதல், விழுங்குதல் மற்றும் பேசுவதில் சிரமம் இருக்கும். உணவு தொண்டையை கடக்கும் போது வலி, ரத்தம் வெளியேறுதல் இருக்கும். வாய் புற்றுநோய் பல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். புற்று நோய் வாய் புண்களையும் உண்டாக்கும். இந்த புண்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும். மருந்து உட்கொண்ட பிறகும் வலியின் தீவிரம் குறையாது.