ஓபிஎஸ்-க்கு எதிராக களமிறங்கும் ஓபிஎஸ்

99596பார்த்தது
ஓபிஎஸ்-க்கு எதிராக களமிறங்கும் ஓபிஎஸ்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் மற்றொரு ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். உசிலம்பட்டி மேக்கிழார்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர் செல்வம் என்பவர் சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். பாஜக கூட்டணியில் இருக்கும் ஓபிஎஸ் தாமரை சின்னத்திலும் போட்டியிடாமல் இரைட்டை இலை சின்னத்திலும் போட்டியிட முடியாமல் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். இந்நிலையில் அவரை எதிர்த்து அவர் பெயரிலேயே மற்றொருவர் போட்டியிடவுள்ளதால் வாக்காளர்கள் குழப்பத்தில் வாக்குகளை மாற்றி செலுத்த வாய்ப்பு உள்ளது என்ற அச்சத்தில் ஓ.பன்னீர் செல்வம் இருந்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி