ஹோலி கொண்டாட்டத்தில் பலியான இளைஞர்.. அதிர்ச்சி வீடியோ

69009பார்த்தது
ஹோலிப் பண்டிகையான இன்று(மார்ச்25) உ.பி மாநிலம் ஆக்ராவில் கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. யமுனா காலனி பகுதியில் உள்ள சையத் காய்கறி மார்க்கெட்டில் ஹோலி விளையாடிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் குழுக்களிடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட நிலையில் ரவி என்ற இளைஞர் தலையில் கல்லால் பலமாக தாக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி