"ஆன்லைன் டெலிவரி பணியாளர்களுக்கு பணிபாதுகாப்பு வழங்க வேண்டும்"

76பார்த்தது
"ஆன்லைன் டெலிவரி பணியாளர்களுக்கு பணிபாதுகாப்பு வழங்க வேண்டும்"
ஆன்லைன் டெலிவரி பணியாளர்களுக்கு உரிய பணிபாதுகாப்பு வழங்க வேண்டும் என தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர், “ஆன்லைன் டெலிவரி சேவை துறையில், தற்போது 80 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இது 2030 ஆம் ஆண்டுக்குள் 2.3 கோடியாக உயரும் என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இந்தத் துறையில் உள்ள பணியாளர்களுக்கு சுகாதார காப்பீடு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட உரிய சமூக பாதுகாப்பை வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி