ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப்பட்டணம் மீனவர்கள் 3 நாட்கள் முன்பு மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கடலில் மீனுக்காக வலை விரித்தபோது பிரம்மாண்ட மீன் ஒன்று வலையில் சிக்கி உள்ளது. அதனை கடும் சிரமத்துடன் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்த பின்னர் கிரேன் உதவியுடன் அந்த மீனை எடைப் போட்டதில் ஒன்றரை டன் இருப்பதும், இந்த மீன் ஆயுர்வேத மருந்து தயாரிக்கப் பயன்படும் தேக்கு மீன் எனவும் தெரிந்தது. இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் அதனை வாங்கிச் சென்றார்.