இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இருந்து ஆப்கானிஸ்தான் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷித்கான் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணி நாளை முதல் ஒரு நாள் தொடர்களில் பங்கேற்க உள்ளது. மொத்தம் மூன்று ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் முன்னணி பந்துவீச்சாளர் ரஷித் கான் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடிய ரஷித்கான், 27 விக்கெட்களை வீழ்த்தினார்.