மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப்செயலியை உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தங்களின் பயனர்களின் வசதிக்காக மெட்டா வாட்ஸ்அப்பில் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில், குவிக் ட்ரான்ஸ்லேஷன் (Quick Translation) என்ற புதிய அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. மெட்டாவின் இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப் பயன்பாட்டை மேலும் சுலபமாக்கும் என கூறப்படுகிறது.