ஒரு நபர் எப்போது மரணமடைவார் என்று துல்லியமாக கணித்து கூறும் மரண கடிகாரம் (Death Clock) என்ற ஆப் வெளியாகியுள்ளது. இந்த ஆப் சுமார் 5.3 கோடி பங்கேற்பாளர்களின் உதவியுடன் 1,200-க்கும் மேற்பட்ட ஆயுட்கால ஆய்வு தரவுகளின் அடிப்படையில் AI தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. உணவு, உடற்பயிற்சி, மன அழுத்த நிலைகள் மற்றும் தூக்கம் பற்றிய தகவல்களைப் பயன்படுத்தி மரணம் நிகழ்வதற்கான சாத்தியமான தேதியை இந்த ஆப் கணிக்கின்றது.