+2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌ முடிவுகளை எப்படி காண்பது?

69பார்த்தது
+2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌ முடிவுகளை எப்படி காண்பது?
நடைபெற்று முடிந்த மார்ச்‌ 2024, மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத் தேர்வுகள்‌ எழுதி, மறு கூட்டல்‌ (Re-total) மற்றும்‌ மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்களுள்‌, மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தேர்வர்களது பதிவண்களின்‌ பட்டியல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ Notification பகுதியில்‌ 18.06.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று பிற்பகல்‌ வெளியிடப்பட உள்ளது. மறு கூட்டல்‌ / மறு மதிப்பீட்டில்‌ மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தேர்வர்கள்‌ மட்டும்‌, மேற்குறிப்பிட்ட இணையதளத்தில்‌ தங்களது பதிவெண்‌ மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு மறுகூட்டல் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி