கனிமொழி, ராதிகா, விஜயபிரபாகரன் வேட்புமனுக்கள் ஏற்பு

81பார்த்தது
கனிமொழி, ராதிகா, விஜயபிரபாகரன் வேட்புமனுக்கள் ஏற்பு
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. அதே போல் ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, வட சென்னை - திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, விருதுநகர் மக்களவை தொகுதியில், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் தமாகா சார்பில் போட்டியிடும் எஸ்.டி.ஆர். விஜயசீலனின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி