கங்குவா 2-ம் பாகத்தோடு யாரும் போட்டி போட முடியாது

67பார்த்தது
கங்குவா 2-ம் பாகத்தோடு யாரும் போட்டி போட முடியாது
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “கங்குவா படத்தின் முதல் பாகத்தோடு யார் வேண்டுமானாலும் போட்டி போடலாம். ஆனால் கங்குவா படத்தின் இரண்டாம் பாகத்தோடு யாருமே போட்டி போட முடியாது என்பதில் 100 சதவீதம் நம்பிக்கையோடு இருக்கிறேன்” என்று கூறியிருந்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்ஸ் ஞானவேல் ராஜாவை கலாய்த்து தள்ளுகின்றனர். அதாவது அஞ்சான் பட ப்ரோமஷனில் பேசிய அவர் 'கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கியிருக்கேன்' என கூறியிருந்தார். ஆனால் படம் படுதோல்வியடைந்தது.

தொடர்புடைய செய்தி