உதகையில் சிறுதானிய உணவு திருவிழா...

68பார்த்தது
உதகையில் சிறுதானிய உணவு திருவிழா.

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக சர்வதேச சிறுதானிய ஆண்டு விழாவை முன்னிட்டு சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது.

இந்த உணவு திருவிழாவில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து மகளிர் சுய உதவி குழுக்கள் பள்ளி கல்லூரி மாணவிகள், என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சோளம், கம்பு, ராகி, திணை குதிரைவாலி உள்ளிட்ட பல்வேறு சிறுதானிய பொருட்களால் ஆன பொங்கல், பிரியாணி, வடை, பாயசம், முறுக்கு மற்றும் கேக் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களை தயாரித்து காட்சிக்கு வைத்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு. அருணா கலந்து கொண்டு உணவு வகைகளை ரசித்து, ருசித்ததோடு மட்டுமின்றி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு தொகையை வழங்கினார்.

டேக்ஸ் :