பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்

53பார்த்தது
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் கவர்கள் பிளாஸ்டிக் தட்டுகள் டம்ளர்கள் 1 லிட்டர் வாட்டர் பாட்டில்கள் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதேப்போல் நீலகிரிக்கு வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்பட்டால் வாகனத்தை பறிமுதல் செய்து கருப்பு பட்டியலில் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் உதகை - மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஃபன்சிட்டி பகுதியில் விடுமுறை தினத்தையொட்டி உதகைக்கு வருகை புரியும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களிலும் உதகை வட்டாட்சியர் சங்கர் கணேஷ் தலைமையில் வருவாய்த் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் வாகனங்களில் கொண்டுவரப்பட்ட தடை செய்யப்பட்ட 1 லிட்டர் மற்றும் 2 லிட்டர் வாட்டர் பாட்டில்கள் பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்தும்அபராதங்கள் விதித்தும் தொடர்ந்து இதுப்போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி