மரவள்ளி கிழங்கில் விஷம் வைத்து புலிகளை கொன்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஆக.2ஆம் தேதி நீலகிரியில் 2 வயது ஆண்புலி மற்றும் 9 வயது பெண் புலி உயிரிழந்து கிடந்தது. அதேபோல் காட்டுப்பன்றி ஒன்றும் இறந்து கிடந்தது.
இதையடுத்து வன அதிகாரிகள் உயிரிழந்த விலங்குகளுக்கு பிரேத பரிசோதனை நடத்தினார்கள். இதில் புலி மற்றும் காட்டுப்பன்றி மரவள்ளி கிழங்கில் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 3 வடமாநில தொழிலாளர்களை வன அதிகாரிகள் கைதுசெய்தனர். இவர்கள் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சூரியநாத் பராக் (35), அமன் கொயாலா (24) மற்றும் சுபித்நன்வார் (25) ஆகியோர் ஆவார்கள்.