குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் சிறுத்தை, கருஞ்சிறுத்தை சமூக வலைத்தளங்களில் வைரல்.
பதப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி.
மலை மாவட்டமான நலகிரி மாவட்டம் 65% சதவீத வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும் இங்கு மான் கரடி சிறுத்தை கருஞ்சிறுத்தை காட்டுமாடு போன்ற வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது
சமீப காலங்களாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது வாடிக்கையாகியுள்ளது
இந்நிலையில் உதகை அடுத்த குளிச்சோலை குடியிருப்பு பகுதியில் ஒன்றன் பின் ஒன்றாக சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை உலா வருவது பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
எனவே குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் சிறுத்தைகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் தற்போது இந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.