நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி சாலையில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று (நவம்பர் 28) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு உணவுக்கூடம், செம்மொழி நூலக அறைகளை பார்வையிட்டார். மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரம், உணவு பொருட்கள் இருப்பு, மாணவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
மாணவர்களுக்கு போர்வைகள் மற்றும் பல்வேறு பொருட்களை வழங்கினார். ஆய்வின் போது, மாணவர்கள் சார்பில் தங்குவதற்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும். குளியல் அறை, கழிவறைகள் கூடுதலாக கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.