ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமிலகொண்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சேத்தன் குமார். இவர், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுவன் காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில், மதகசிராவை ஒட்டிய கர்நாடகா வனப்பகுதியில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் விசாரணையில், சிறுவன் கடத்தப்பட்டு கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.