வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக மணிக்கு 9 கி.மீ., வேகத்தில் நகர்ந்த தாழ்வு மண்டலம் தற்போது 7 கி.மீ., வேகத்தில் நகரத் தொடங்கி இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாகையில் இருந்து 310 கி.மீ., தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 360 கி.மீ., தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.