வீட்டிற்குள் புகுந்து பெண்களை வெட்ட முயன்ற கும்பல்

58பார்த்தது
வீட்டிற்குள் புகுந்து பெண்களை வெட்ட முயன்ற கும்பல்
காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் காலணி பகுதியைச் சேர்ந்த ராஜாராம்‌ என்பவரது 2வது மகன் பிரேம் குமார், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று (நவ. 28) மாலை 7 மணியளவில் 6 பேர் கொண்ட கும்பல் ராஜாராம் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவி, மகளை வெட்ட முயன்றது. அவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து அந்த கும்பல் தப்பியது. கொலை வழக்கில் கைதான பிரேம் குமாரை பழிக்குப் பழி வாங்க இந்த கொலை முயற்சி நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி