டங்ஸ்டன் ஏல உரிமத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சம்பந்தப்பட்ட மாநில அனுமதி இன்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் மத்திய அரசு சுரங்க உரிமம் வழங்கியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.