கூடலூர், மசினகுடி அருகே பிரசித்தி பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து உள்ளதால், பொக்காபுரம் பகுதியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. உணவகங்கள், பலகார கடைகள் உள்ளது. இரவு, பகலாக கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருவதால் அமோகமாக விற்பனை நடைபெற்று வருகிறது.
இதை பயன்படுத்தி பக்தர்களுக்கு தரமற்ற உணவு பொருட்கள் வழங்கப்படுகிறதா என சோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையினர் பொக்காபுரம் கோவில் திருவிழாவுக்காக அமைக்கப்பட்டு உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் உணவு பொருட்கள் தரமாக உள்ளதா? என சோதனை செய்தனர்.