ஏற்காடு மலைப்பாதையில் இளம் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இரவு 10 மணிக்கு மேல் மலைப்பாதையில் பயணிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். குற்றச்சம்பவங்களை தடுக்கும் விதமாக ஏற்காடு போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். சமூக விரோதிகள் சுற்றுலாப் பயணிகள் போல் சோதனைச் சாவடியை எளிதாக கடந்து செல்லவதால் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. உள்ளூர்வாசிகள் சோதனைக்குப் பின்னர், உரிய ஆவணம் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.