தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள கொடி மரங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகள் உங்கள் அலுவலகங்களில் கொடி மரங்கள், கட்சி கொடிகளை வைத்துக் கொள்ளுங்கள் என்றும் சாலைகள் தடையற்ற போக்குவரத்தும், பொதுமக்களின் பாதுகாப்பும் முக்கியம் என சுட்டிக்காட்டியுள்ளது. நெடுஞ்சாலைகளில் கட்சி கொடிகள், பிளக்ஸ் பேனர்கள், கொடி மரங்கள் வைக்க அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது.