ராஜஸ்தானில் இன்று (மார்ச். 06) அதிகாலை நடந்த பயங்கரமான சாலை விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிரோஹி மாவட்டத்தில் வேகமாக வந்த கார், லாரி மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கோர விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் சம்பவம் குறித்து போலீஸ் தொடர்ந்து விசாரிக்கிறது.