கைகுழந்தைகளுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

75பார்த்தது
நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலாவை அடுத்த கைதகொல்லி கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்கள் மற்றும் கை குழந்தைகளுடன் நெல்லியாலம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நகராட்சி அலுவலர்களை அலுவலகத்திற்குள் விடாமல் கைக்குழந்தைகளை
வாசல் படியில் போட்டு போராட்டம் செய்தனர்.

கை குழந்தையை தாண்டி அதிகாரிகள் அலுவலகத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு.

பந்தலுரை அடுத்துள்ள தேவாலா அருகே
நெல்லியாலம் நகராட்சிக்கு உட்பட்ட 16 - வது வார்டு கைதக்கொல்லி காலணி யில் தொடர்ந்து இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

குடிநீர் கேட்டு பலமுறை நெல்லியாலம் நகராட்சி
நகர் மன்ற தலைவி சிவகாமி மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம்மும் பலமுறை மனு கொடுத்தும் பயனில்லை

கிராம சபை கூட்டங்களில் எடுத்துரைத்தும் எந்த ஒரு பயனும் இல்லை.

தேவாலா கைதகொள்ளி இருக்கும் குடும்பங்களுக்கு தேர்தலுக்கு முன் 2 லட்சத்து 80ஆயிரம் ரூபாயில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என நகர்மன்றத் தலைவி வாக்குறுதி அளித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி