உதகையில் போலீசார் தபால் ஓட்டுக்கள் செலுத்தினார்கள்

556பார்த்தது
உதகையில் போலீசார் தபால் ஓட்டுக்கள் செலுத்தினார்கள்
மாநிலத்தில் வரும், 19ல் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப் படி, முதியோர், மாற்றுத் திறனாளிகள் உட்பட, தகுதியான அனைவரும், 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டத்தில், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் ஓட்டு அளிக்கும் வகையில், வீடு, வீடாக சென்று, தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் உதகையில் போலீசார் தபால் ஓட்டு அளிக்கும் பணி நடந்தது. இதனை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி