பந்தலூரில் துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது

1872பார்த்தது
பந்தலூரில் துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது
பந்தலூர் அருகே தேவாலா அட்டி பகுதியில் 2 பேர் துப்பாக்கி வைத்திருப்பதாக தேவாலா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர்.

இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். இதில் சசிகுமார் ( 42), மணி (44) ஆகிய 2 பேர் வன விலங்குகளை வேட்டையாட கேரளாவில் ரூ. 14 லட்சத்தில் துப்பாக்கி வாங்கியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கள் கூடலூர் சிறையில் அடைக்கப் பட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி