குந்தா மின் வட்டத்தில் மின் கோபுர பணி தீவிரம்

67பார்த்தது
குந்தா மின் வட்டத்தில் மின் கோபுர பணி தீவிரம்
நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்திற்கு உட் பட்ட எமரால்டு வேலி அருகே, 1800 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4 பிரிவுகளின் கீழ், தலா, 125 மெகாவாட் வீதம், 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான குந்தா நீரேற்று மின் நிலையத்திற்கான கட்டுமான பணிகள், சில ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. கடந்த, 2013 ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், 11 ஆண்டுகள் கடந்த நிலையில் பல்வேறு காரணங்களால் இன்னும் முடியாமல் உள்ளது. முதற்கட்டமாக சுரங்க பாதை அமைக்கும் பணி, 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. பிற கட்டுமான பணிகளும் நடந்து வருகிறது. முதல் பிரிவுக்கான, 125 மெகாவாட் பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், குந்தா நீரேற்று மின்நிலையத்தி லிருந்து, மேட்டுப்பாளையம், கோவை, ஈரோடு பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்ல, 10 க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சத மின் கோபுரம் அமைக்கும் பணி ஆங்காங்கே நடந்து வருகிறது. இதற்காக மின் உதிரி பாகங்கள், மின் கம்பிகளை கொண்டு வந்து எமரால்டு பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி