நீலகிரி மாவட்டம், பழைய அருவங்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரன். நீலகிரி மெட்ரிக் பள்ளியில் டிரைவராக இருந்தார். சந்திரன் இவரது நண்பர் லாரி டிரைவரான மணி என்பவருடன் நேற்று, காரில் எல்லநள்ளி வந்து திரும்பி பழைய அருவங்காடு சென்ற போது, மணி காரை ஓட்டி வந்தநிலையில், எல்லநள்ளி பழைய அருவங்காடு சாலையில், தனியார் வாட்டர் சர்வீஸ் அருகே கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் இருந்த மரத்தில் கவிழ்ந்தது.
இதில், மோதி சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மணி, ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து கேத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.