நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து வேனில் பயணித்த 19 நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நெய்வேலி குத்தாண்டி குப்பம் பகுதியை சேர்ந்த நான்கு குழந்தைகள் மற்றும் நான்கு பெண்கள் 11 இளைஞர்கள் அடங்கிய குழுவினர் உதகைக்கு வேன் மூலம் இன்ப சுற்றுலா வந்தனர் சுற்றுலா வேனை வீர மார்த்தாண்டன் 40 என்பவர் ஓட்டி வந்தார் உதகையை சுற்றி பார்த்துவிட்டு ஊர் திரும்பும் வழியில் கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஆறாவது கொண்டை ஊசி வளைவு கே என் ஆர் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது ஆனால் வேனில் பயணித்த ஓட்டுனர் உட்பட 20 நபர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் ஒரு பெண் குழந்தைக்கு மட்டும் முகத்தில் சிறு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது குழந்தையை குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர் மேலும் தகவல் அறிந்த குன்னூர் போக்குவரத்து ஆய்வாளர் முத்து கணேஷ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் டோமினிக் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கிரேன் மூலம் சாலையில் விழுந்து கிடந்த வாகனத்தை அப்புறப்படுத்தினர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.