விழுப்புரம்: திமுக நிர்வாகி தவமணியின் மகனான கலாநிதிக்கு மார்ச். 16ல் திருமணம் நடைபெற இருந்தது. நேற்று திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டு பைக்கில் சென்ற கலாநிதி ரயில்வே கேட் அருகில் வந்தார். அப்போது லாரியை டிரைவர் வேகமாக இயக்கி ரயில்வே கேட்டை கடக்க முயன்றார். கலாநிதி பைக்கும் அருகே சென்றபோது லாரி, கேட் மீது மோதி அது உடைந்து அவர் மீது விழுந்ததில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.