பெண்கள் 40 வயது அடையும்பொழுது அவர்களுக்கு எலும்பு பலவீனம் பிரச்சனை தொடங்குகிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கு சத்தான உணவை உட்கொள்ள வேண்டும். மீன்கள் சாப்பிடுவது எலும்புகளுக்கு நல்லது. அதேபோல் சியா, ஆளி விதைகள் சாப்பிட்டால் பெண்களில் எலும்புகளை வலுப்படுத்தும். பால், தயிர், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பால் பொருட்களில் கால்சியம், வைட்டமின் டி உள்ளன. இவை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவாகும். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம் போன்றவை இருப்பதால், இவை எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.