கடுமையான இருமல், அதிக காய்ச்சலை ஏற்படுத்தும் மர்ம வைரஸ் பற்றிய செய்திகளை ரஷ்ய சுகாதார அதிகாரிகள் மறுத்துள்ளனர். பொது சுகாதாரத்தை மேற்பார்வையிடும் Rospotrebnadzor நிறுவனம், புதிய நோய்க்கிருமிக்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளது. மைக்கோப்ளாஸ்மா நிமோனியா போன்ற பொதுவான சுவாச நோய்த்தொற்றுகளே இந்த பாதிப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளது. பல்வேறு நகரங்களில் அண்மையில் சிகிச்சை பெற்ற சிலருக்கு கடும் காய்ச்சல், இருமல், இரத்தப்போக்கு ஏற்பட்டதே இந்த சந்தேகத்திற்கு காரணமாக அமைந்தது.