நீட் தேர்வு ரத்து? - மத்திய கல்வி அமைச்சர் தலைமையில் ஆலோசனை

59பார்த்தது
நீட் தேர்வு ரத்து? - மத்திய கல்வி அமைச்சர் தலைமையில் ஆலோசனை
டெல்லியில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்துள்ள நிலையில் மத்திய அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். யூஜிசி நெட் தேர்வில் ஏற்பட்ட முறைகேட்டால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனையால் நீட் தேர்வும் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி