பும்ரா போன்ற ஒரு பந்து வீச்சாளர் தேவை: டுபிளெசிஸ்

72பார்த்தது
பும்ரா போன்ற ஒரு பந்து வீச்சாளர் தேவை: டுபிளெசிஸ்
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒரு பந்து வீச்சாளர் தங்கள் அணியில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ஆர்சிபி கேப்டன் ஃபேப் டுபிளெசிஸ் தெரிவித்துள்ளார். பும்ரா சிறந்த பந்துவீச்சு திறன் கொண்டவர். மலிங்காவின் கீழ் அவர் மேலும் முன்னேறினார். அத்தகைய கிளாஸ் பந்து வீச்சாளர் நமக்குத் தேவை. இப்போட்டியில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டாலும், பந்துவீச்சாளர்கள் சற்று சிரமப்பட்டனர். எங்களது பந்துவீச்சு வலுவாக இல்லை' என்றார்.

தொடர்புடைய செய்தி