எதிர்க்கட்சிகளின் முகலாய மனநிலை.. மோடி சர்ச்சை

84பார்த்தது
எதிர்க்கட்சிகளின் முகலாய மனநிலை.. மோடி சர்ச்சை
மக்களவைப் பொதுத் தேர்தலில் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (ஏப்ரல் 12) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரில் பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் எதிர்க்கட்சியினர் புனித மாதமான சாவன் மாதத்தில் அசைவம் சாப்பிடுகிறார்கள். இது அவர்களது முகலாயர்களின் மனநிலையை எடுத்துக்காட்டுகிறது எனத் தெரிவித்தார். மோடியின் இந்த பேச்சு மதரீதியில் பிளவை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி