இசைஞானி இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரணி கடந்த 2024-ல் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். நேற்று (பிப். 12) அவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் இளையராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "பவதாரணியின் கடைசி ஆசை 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அடங்கிய ஆர்கெஸ்ட்ரா குழுவை தொடங்க வேண்டும் என்பது தான். அதை நான் தொடங்க இருப்பதாக தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.