சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தந்தை, மகனை கொன்ற வழக்கில், முன்னாள் காங்கிரஸ் எம்.பி., சஜ்ஜன் குமார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையை தொடர்ந்து 1984-ல் டெல்லி சரஸ்வதி விஹாரில் நடந்த கலவரத்தில் ஜஸ்வந்த் சிங், அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோரை சஜ்ஜன் குமாரின் தூண்டுதலால் கலவரக்காரர்கள் எரித்துக்கொன்றனர். இதுதொடர்பான வழக்கில், 41 ஆண்டுகளுக்குப் பின் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தண்டனை விபரம் பிப். 18இல் அறிவிக்கப்படும்.