ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் முழுவதும் பறவைக் காய்ச்சல் வைரஸ் பாதிப்பு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரே நாளில் 8,000க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளன. இறந்த கோழிகளை அருகிலுள்ள பகுதியில் ஆறு அடி குழி தோண்டி புதைத்து வருகின்றனர். சோதனைக்கு அனுப்பப்பட்ட கோழிகளின் ரத்த மாதிரிகளில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் இருப்பது கண்பிடிக்கப்பட்டது. ஆந்திர எல்லையில் இருக்கும் தெலங்கானா மாநில பகுதிகளில் கோழி, மற்றும் முட்டை வாகனங்கள் உள்ளே வருவதை தடுத்து வருகின்றனர்.