சீனாவில், தனது ஊழியர்களுக்கு, லாபத்தில் இருந்து ரூ.64 லட்சத்தை உணவகம் நடத்திவரும் முதலாளி பகிர்ந்து கொடுத்துள்ளார். சீன புத்தாண்டை முன்னிட்டு, அன்று விடுப்பு எடுக்காமல் உழைத்த ஊழியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதனை செய்துள்ளார். வருடம் முழுவதும் கடினமாக உழைத்தவர்கள் புத்தாண்டை சந்தோசமாக குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என நிறுவனத்தின் உரிமையாளர் நினைத்துள்ளார். புத்தாண்டு விழாவை முன்னிட்டு அந்த கடையில், 3 நாட்களில் ரூ.1.2 கோடிக்கு மேல் வியாபாரம் நடந்துள்ளது.