சட்டையம்புதூர் மாரியம்மன் கோயில் திருவிழா

53பார்த்தது
சட்டையம்புதூர் மாரியம்மன் கோயில் திருவிழா
நாமக்கல் மாவட்டம் சட்டையம்புதூர் மாரியம்மன் கோயில் திருவிழாவை யொட்டி உற்சவர்கள் திருவீதி உலா நடைபெற்றது. தினந்தோறும் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா வந்து அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 

சட்டையம்புதூர் செங்குந்தர் பாவடி பஞ்சாயத்தாரின் அழகு முத்துமாரியம்மன், முத்துக்குமரன், முக்கூட்டு விநாயகர் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் மூலவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் புஷ்ப வாகனத்திலும், சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா நடைபெற்றது. பொதுமக்கள் உற்சவ மூர்த்திகளுக்கு பழம், தேங்காய் படைத்து தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி