நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த பள்ளிப்பாளையம் நகரம், 20 வது வார்டு பெரியார் நகர் பகுதியில், ரூ. 10. 79 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் மோ. செல்வராஜ், துணை தலைவர் பாலமுருகன், நகராட்சி ஆணையர் தாமரை, உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.