மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாஜக அரசு தமிழகத்திற்கு நிதி வழங்காததை கண்டித்தும் தமிழக விரோத போக்கை கண்டித்தும் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாசிச பாஜக ஆட்சியை கண்டித்தும் தமிழகத்திற்கு நிதி வழங்காத நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்தும் 2019 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்துவிட்டு இதுவரை ஒரு பைசா கூட க்காக ஒன்றிய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி